மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆஸ்திரேலிய தூதர்கள் வருகை.

Published Date: February 20, 2023

CATEGORY: CONSTITUENCY

ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் பெரிஒ -பாரல், துணைத் தூதர் சாரா கிர்லா ஆகியோர் இன்று மதுரைக்கு வந்தனர். அவர்கள் சொக்கிகுளம் இல்லத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்தனர். தமிழகத்தின் நிதி முதலீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் ஆஸ்திரேலியா தூதர்கள் இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கோவிலில் சிற்பங்கள், ஆயிரங்கால் மண்டபத்தை பார்த்து வியப்படைந்தனர்.

Media: Malaimalar